Wednesday 26 April 2017 | By: Menaga Sathia

உப்பு (அட ) மாங்கா /Uppu (Ada )Manga | Summer Spl

போன வருடம் ஊருக்கு சென்றிருந்த போது மாமியார் இந்த அட மாங்காயை கொடுத்தாங்க.அவங்க செய்யும் போது பார்த்தாலும் படம் எடுக்கவில்லை.

இது எனக்கு ரொம்ப பிடிக்கும்,அப்படியே கூட சாப்பிடலாம்,மோர் குழம்பு ,வத்தல் குழம்பு,பச்சடி என செய்யலாம்.

இந்த மாங்காயின் கொட்டையை குழம்பு வைக்கலாம்.உடம்புக்கு மிக நல்லதும் கூட...

இதில் உப்பு அதிகம் இருப்பதால் குழம்பில் உப்பின் அளவை குறைத்து போடவும்.

வத்தல்களில் உப்பு தான் ப்ரிசர்வேடிவ் என்பதால் உப்பினை அதிகம் போடவும்.

தே.பொருட்கள்

கிளி மூக்கு மாங்காய்-  5
கல் உப்பு - தேவைக்கு
மஞ்சள்தூள் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
*மாங்காயை கழுவி நன்கு துடைத்து பக்கவாட்டில் முக்கால் பாகம் வரை நறுக்கவும்.

*எப்படி என்று மேலிருக்கும் படத்தை பார்த்தால் புரியும் என நினைக்கிறேன்.

*கல் உப்பு,மஞ்சள்தூள் இரண்டையும் ஒன்றாக கலந்து வைக்கவும்.

*உப்பு கலவையை நறுக்கிய மாங்காயில் நங்கு அடைத்து வைக்கவும்.இப்படியே அனைத்து மாங்காயில் செய்த பின் பீங்கான் ஜாடி அல்லது பானையில் வைத்து மெல்லிய துணியால் மூடி வைக்கவும்.

*இப்போழுது மறுநாள் மாங்காய்  நங்கு ஊறி நீர் விட்டிருக்கும்.

*தனியாக மாங்காயினை மட்டும் தட்டில் வைத்து வெயிலில் காய்வைக்கவும்.மாங்காய் ஊறவைத்த பானையும் நீரோடு ,துணியால் மூடி வெயிலில் வைக்கவும்.

*மாலையில் திரும்ப மாங்காயினை பானையில் போட்டு எடுத்துவைக்கவும்.இதே போல் நீர் வற்றும் வரை செய்த பின் மாங்காய் வெளிர் பச்சை நிறத்தில் இருக்கும்.

*இதனை மீண்டும் நன்கு காயவைத்து எடுத்து பத்திரபடுத்தவும்.அதாவது  மாங்காயை ஆட்டினால் உள்ளிருக்கும் கொட்டை சத்தம் கேட்க வேண்டும்.

மாந்தோல் குழம்பு 
மாம்பருப்பு குழம்பு

2 பேர் ருசி பார்த்தவர்கள்:

Unknown said...

We shall try in our house. Process seems to be very very simple.

KILLERGEE Devakottai said...

அடடே புகைப்படமே ஸூப்பராக இருக்கிறதே - கில்லர்ஜி

01 09 10