Monday 27 February 2017 | By: Menaga Sathia

தரைபசலைக் கீரை கடையல் / Tharai Pasala Keerai Kadaiyal | Keerai Recipes


பசலைக்கீரையில் கொடி பசலை மற்றும் தரைபசலை என இருவகைகள் உண்டு.தரை பசலைக்கீரையை கடையல் மட்டுமே செய்ய முடியும்.

இதனை தனியாகவோ அல்லது மற்ற அனைத்துவகை கீரைகளுடன் கலந்து சேர்த்து கடையலாம்.

தரைபசலையுடன் அனைத்துகீரையும் சேர்ந்து இருப்பதால் இதனை கலவை கீரை என்றும் சொல்வார்கள்.

இந்த ரெசிபியில் தரைபசலையுடன் அனைத்து கீரையும் கலந்து சேர்த்து கலைந்துருக்கேன்.

தே.பொருட்கள்

கலவை கீரை - 4 கப்
தக்காளி -1 பெரியது
பூண்டுப்பல் - 4
பச்சைமிளகாய் - 3
உப்பு - தேவைக்கு

தாளிக்க
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்
வடகம் -2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
கலவைக்கீரை

செய்முறை

*கலவை கீரையை சுத்தம் செய்து நன்கு அலசிக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் கீரை+தக்காளி+பூண்டு+பச்சைமிளகாய் என தேவையான நீர் சேர்த்து வேகவிடவும்.

*கீரை வெந்ததும் கீரை கடையும் சட்டியிலோ அல்லது மிக்ஸியிலோ உப்பு சேர்த்து கடையவும்.

*தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கீரையில் கலந்து மறுபடியும் நன்றாக கடைந்து பரிமாறவும்.

*காரகுழம்புடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
Monday 13 February 2017 | By: Menaga Sathia

முடக்கத்தான் கீரை சூப் /Mudakathan Keerai (Balloon Vine) Soup | Soup Recipes

 முடக்கத்தான் கீரையை மாதம் 2 முறை உணவில் சேர்த்துக் கொண்டால் முட்டுவலி,நரம்பு தளர்ச்சி வராது.

இந்த கீரை லேசாக கசப்பு தன்மை கொண்டது.இதனை சூப் போல் குடித்தால் சளி,இருமல் சீக்கிரம் குணமடையும்.

தலைமுடி நன்கு வளரவும் இதனை உபயோகிக்கலாம்.

தே.பொருட்கள்
முடக்கத்தான் கீரை - 1 கப்
மிளகு,சீரகம் -  தலா 1 டீஸ்பூன்
பூண்டுப்பல் -4
நெய் -1 டீஸ்பூன்
நீர் --3 கப்
உப்பு-தேவைக்கு
முடக்கத்தான் கீரை

செய்முறை

*மிளகு+சீரகம்+பூண்டு இன்றிரண்டாக பொடித்துக் கொள்ளவும்.

*பாத்திரத்தில் நெய் விட்டு பொடித்த மிளகு சீரகத்தினை போட்டு லேசாக வதங்கியதும் சுத்தம் செய்த கீரையை போட்டு வதக்கவும்.


 *3 கப் நீர் ஊற்றி கொதிக்கவிடவும்.
 *பாதியளவு நீர் சுண்டியதும் உப்பு சேர்த்து இறக்கவும்.
*லேசாக கீரையை மசித்து வடிகட்டி சூடாக பருகவும்.
Thursday 9 February 2017 | By: Menaga Sathia

பிடி கருணை மசியல் / Pidi Karunai Masiyal | Karunai Kizhangu Masiyal

 30 நாள் வெஜ் லஞ்ச் மெனுவில் சேனை கிழங்கில் மசியல் செய்துருப்பேன்.சேனை கிழங்கை விட  பிடி கருணை மசியல் நன்றாக இருக்கும்.

பிடி கருணையின் அரிப்பு தன்மையை போக்க வாங்கியதும் உடனே சமைக்காமல் 2 வாரம் கழித்து சமைத்தால் அரிப்பு இருக்காது.

மேலும் இதனை வேக வைக்கும் போது தேங்காய் ஒடு சேர்த்து வேகவைத்தாலும் அரிப்பு இருக்காது என்பது என் அம்மாவின் டிப்ஸ்.

இந்த குறிப்பினை முகநூல்  பானுமதி மாமியிடம் கற்றுக்கொண்டேன்.

தே பொருட்கள்
பிடிகருணை - 6
சிறிய தேங்காய் ஒடு - பிடிகருணை வேகவைக்க
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு -1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு -1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

செய்முறை
*பிடி கருணையை மண்ணில்லாமல் கழுவி தேங்காய் ஒடு சேர்த்து குக்கரில் 2 விசில் வரை வேகவிடவும்.

*வெந்ததும் தோலுரித்து கட்டியில்லாமல் மசித்துக் கொள்ளவும்.
 *பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து பச்சை மிளகாய்,இஞ்சி,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
 *பின் மசித்த கருணை,உப்பு சேர்த்து தேவையானளவு நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
*லேசாக கொதித்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கவும்.

பி.கு
*இதனை சாதத்தில் சேர்த்து  வறுவலுடன்  சேர்த்து சாப்பிடலாம்.அல்லது பக்க உணவாக காரகும்புடன் சேர்த்து சாப்பிடலாம்.

Monday 6 February 2017 | By: Menaga Sathia

சென்னாகுன்னி இட்லி பொடி / Sennakunni (Dried Baby Shrimps ) Idli Podi | Side Dish For Idli & Dosa

 சென்னாகுன்னி என்பது காய்ந்த சிறிய இறால். இதில் வறுவல்,இட்லி பொடி  செய்யலாம்.இதன் இட்லி பொடி எங்க ஊரில் மிக பிரபலம்.
இட்லிக்கு தொட்டு சாப்பிட மிக நன்றாக இருக்கும்.

இந்த பொடியை இட்லியுடன் சாப்பிடும்போது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடகூடாது.

தே.பொருட்கள்

சென்னாகுன்னி - 1/4 கப்
பொட்டுக்கடலை -1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
மிளகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கு

செய்முறை
*வெறும் கடாயில் சென்னாகுன்னியை லேசாக மணம்வரும் வரை வறுத்து ஆறவைக்கவும்.
 *இதனை முறத்தில் போட்டு சூடாக இருக்கும்போதெ கையால் தேய்த்தால் மண் எல்லாம் வந்துவிடும்.பின் மேலோடு புடைத்து எடுத்து தனியாக வைக்கவும்.
*பின் மற்ற பொருட்களில் உப்பை தவிர அனைத்தையும் தனிதனியாக வறுத்து ஆறவைத்த பின் உப்பு மற்றும் சுத்தம் செய்த சென்னாகுன்னியுடன் கொரகொரப்பாக பொடித்து எடுக்கவும்.
Wednesday 1 February 2017 | By: Menaga Sathia

பிரண்டை துவையல் / Pirandai (Adamant Creeper ) Thuvaiyal | Pirandai Chutney



பிரண்டை துவையல் சாப்பிடுவது சுவையின்மையை நீக்கி பசியை தூண்டும்.இது செரிமாண சக்தியை தூண்டும்,அஜீரணக் கோளாறை நீக்கும்.மேலும் இதன் துவையல் சாப்பிடுவதால் எலும்பு முறிவால் ஏற்படும் வலி,வீக்கம் குணமாக்கும்.

பிரண்டை உடலில் உள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும்.

இந்த துவையலின் ரெசிபியை விற்றவரிடமே கேட்டு செய்தேன்.மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது.
Pirandai
 தே.பொருட்கள்

பிரண்டை -1 கற்று
இஞ்சி- 2 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பல் -1/4 கப்
புளி -சிறிய எலுமிச்சை அளவு
காய்ந்த மிளகாய்- 8
உப்பு- தேவைக்கு
எண்ணெய் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை

*பிரண்டையை கழுவி ,நடு கணுவை நீக்கி நறுக்கி நார் நீக்கவும்.
 *இதனை நறுக்கும் போது கையில் அரிப்பு ஏற்படும்,கையில் எண்ணெய் தடவி நறுக்கினால் அரிக்காது.

*பின் பிரண்டையை பொடியாக நறுக்கவும்.

*கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய இஞ்சி,பூண்டு,காய்ந்த மிளகாய் என தனிதனியாக வறுத்து எடுக்கவும்.
*கடைசியாக நறுக்கிய பிரண்டையை சேர்த்து நன்கு வெளிர் நிறமாக மாறும் வரை வதக்கி எடுக்கவும்.

*ஆறியதும் ஒன்றாக புளி+உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும்.

*சாதத்தில் நெய்/நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

பி.கு

*பிரண்டையை நன்கு வதக்கவில்லை எனில் சாப்பிடும் போது அரிப்பு எடுக்கும்.

*உளுத்தம் ப‌ருப்பு சேர்க்காமல் அரைத்ததில் துவையல் மிகவும் சுவையாக இருந்தது.

01 09 10