Monday 12 December 2016 | By: Menaga Sathia

முட்டையில்லாத சாக்லேட் மூஸ் /Eggless Chocolate Mousse


தே.பொருட்கள்

Dark Chocolate(Chopped) - 1 கப்
வெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
ஹெவி விப்பிங் க்ரீம் - 1 கப்
ஐசிங் சர்க்கரை - 1/4 கப்
வெனிலா எசன்ஸ் -1 டீஸ்பூன்

செய்முறை
*ஒரு பவுலில் சாக்லேட்+வெண்ணெய் சேர்த்து டபுள் பாய்லர் அல்லது மைக்ரோவேவில் உருகி ஆறவைக்கவும்.


*விப்பிங் கீரிமில் ஐசிங் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

*இதில்  1/4 கப் விப்பிங் க்ரீமை அலங்கரிப்பதற்காக எடுத்து வைத்து மீதியில் இருக்கும் கீரிமில் பாதியை உருகிய சாக்லேட்டில் மிருதுவாக கலக்கவும்.
*பின் மீதி பாதி விப்பிங் கீரிமை கலந்து  பரிமாறும் பவுலில் வைத்து பிரிட்ஜில் 2 மணிநேரம் செட்டாகவைக்கவும்.
*பரிமாறும் போது மேலே விப்பிங் கீரிமை வைத்து அதன்மீது துருவிய சாக்லேட் தூவி பரிமாவும்.

பி.கு

*இங்கு நான் 85% டார்க் சாக்லேட்  பயன்படுத்தியிருப்பதால் சர்க்கரை சேர்த்து இருக்கேன்.அதற்கு பதில்Semi Sweet Chocolate  பயன்படுத்தினால் சர்க்கரை சேர்க்கதேவையில்லை.
Wednesday 2 November 2016 | By: Menaga Sathia

வாணியம்பாடி சிக்கன் பிரியாணி/Vaniyambadi Chicken Biryani


இந்த பிரியாணியில் தக்காளி சேர்க்காமல் வெங்காயத்தினை அரைத்து நன்றாக வதக்கி சேர்க்க வேண்டும்.

தே.பொருட்கள்

பாஸ்மதி -3 கப்
வெங்காயம் -2 பெரியது
கீறிய பச்சை மிளகாய்- 4
புதினா கொத்தமல்லி தலா -1 கைப்பிடி
நெய் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் -தேவைக்கு

சிக்கனில் ஊறவைக்க‌
சிக்கன்- 1/2 கிலோ
தயிர் -1 கப்
இஞ்சி பூண்டு விழுது- 1 1/2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் -5 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்

தாளிக்க‌
பட்டை -சிறுதுண்டு
ஏலக்காய் -3
கிராம்பு -4
பிரியாணி இலை -2

செய்முறை
*வெங்காயத்தினை நன்றாக மைய அரைக்கவும்.

*சிக்கனில் ஊறவைக்க கொடுத்துள்ள பொருட்களிளை சேர்த்து குறைந்தது 1 மணிநேரமாவது ஊறவைக்கவும்.


*பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காய விழுதினை சேர்த்து குறைந்த தீயில் நன்கு பச்சை வாசனை போகுமளவு வதக்கவும்.

*பின் கீறிய பச்சை மிளகாய்+புதினா கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
*ஊறவைத்த சிக்கனை சேர்த்து சிக்கன் முக்கால் பதம் வேகும் வரை வதக்கவும்.

*4 கப் நீர்+உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

*நீர் கொதிக்கும் போது அரிசியை சேர்க்கவும்.

*தண்ணீர் நன்கு வற்றி வரும் போது தோசைகல்லை காயவைத்து அதன் பாத்திரத்தை வைத்து குறைந்த தீயில் 10 நிமிடங்கள் தம்மில் போடவும்.


*பின் நெய் சேர்த்து மெதுவாக கிளறி பரிமாறவும்.

பி.கு

*வெங்காய விழுதினை நன்கு வதக்கவும் இல்லையெனில் பச்சை வாசனை அடிக்கும்.

*சிக்கன் நீர் விடும் மேலும் வெங்காய விழுது சேர்த்திருப்பதால் நான் 1/2 கப் நீர் குறைத்து சேர்த்துள்ளேன்.


Wednesday 19 October 2016 | By: Menaga Sathia

பீட்ரூட் பொரியல் / BEETROOT PORIYAL


print this page PRINT IT
தே.பொருட்கள்

பீட்ருட் துருவல் - 2 கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
தேங்காய்த்துறுவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க

எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு+உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*கடாயில் எண்ணெய்  தாளிக்க கொடுத்துள்ளவைகளை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
*பீட்ரூட் துறுவல்+உப்பு +பச்சை மிளகாய்+சிறிது நீர் தெளித்து மூடி போட்டு வேக விடவும்.


*காய் வெந்ததும் தேங்காய்த்துறுவல் சேர்த்து கிளறி இறக்கவும்.
Tuesday 4 October 2016 | By: Menaga Sathia

ப்ரோக்கலி சட்னி/Broccoli Chutney


தே.பொருட்கள்

ப்ரோக்கலி பூக்கள் - 1/4 கப்
நறுக்கிய வெங்காயம்+தக்காளி - தலா 1
காய்ந்த மிளகாய் - 2
பூண்டுப்பல் - 4
இஞ்சி - சிறுதுண்டு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*ப்ரோக்கலி பூக்களை உப்பு கலந்த சுடு நீரில் 10 நிமிடங்கள் போட்டு எடுத்து கழுவி நீரை வடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு ப்ரோக்கலி பூக்களை வதக்கி தனியாக வைக்கவும்.

*அதே கடாயில் பூண்டுப்பல்+இஞ்சி+மிளகாய் இவற்றை வதக்கிய பின் வெங்காயம்+தக்காளி சேர்த்து வதக்கவும்.


*ஆறியதும் உப்பு சேர்த்து அரைக்கவும்.கடைசியாக வதக்கிய ப்ரோக்கலியை சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்.



Wednesday 17 August 2016 | By: Menaga Sathia

குட்டி உருளை வறுவல்/BABY POTATO MASALA | MADURAI MASALA RECIPE

வித்தியாசமான சுவையுடன் இருக்கும் இந்த உருளை மசாலா.குட்டி உருளைக்கு பதில் பெரிய உருளையிலும் இதே போல் வேகவைத்து சதுரமாக வெட்டி செய்யலாம்.நன்றி சித்ரா !!

தே.பொருட்கள்

குட்டி உருளை -1/4 கிலோ
பொடியாக நருக்கிய வெங்காயம்- 1
நசுக்கிய இஞ்சி பூண்டு- 1 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -2 டேபிள்ஸ்பூன்
உப்பு -தேவைக்கு

அரைக்க‌
பொட்டுக்கடலை -11/2 டேபிள்ஸ்பூன்
புளி -ப்ளுபெர்ரி அளவு
வரமிளகாய்த்தூள் -2 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/4 டீஸ்பூன்
சோம்பு- 1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்

தாளிக்க‌
எண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்
கடுகு +உளுத்தம்பருப்பு -தலா 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து

செய்முறை
* உருளையை வேகவைத்து தோலுரிக்கவும்.

*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.



*கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம்+நசுக்கிய இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி உருளை 2 நிமிடங்கள் சேர்த்து வதக்கவும்.

*பின் அரைத்த மசாலா சேர்த்து நன்கு பொன்னிறமாக் வரும் வரை சிறுதீயில் கிளறி கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.


பி.கு
*என்னிடம் கொத்தமல்லிதழை இல்லாததால் நான் சேர்க்கவில்லை.
Friday 17 June 2016 | By: Menaga Sathia

நெஞ்சு எலும்பு குழம்பு / Nenju Elumbu Kuzhambu

 தே.பொருட்கள்
நெஞ்சு எலும்பு - 1/2 கிலோ
சின்ன வெங்காயம் -2 கப்
தக்காளி -1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது -1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் -1 டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்த்தூள் -2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கெட்டி தேங்காய்ப்பால் -1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு -3
ஏலக்காய் -1
பிரியாணி இலை -2

செய்முறை
*குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து,நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
 *வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி சேர்க்கவும்.
 *தக்காளி நன்றாக வதங்கியதும் சுத்தம் செய்த எலும்பினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
 *எலும்பின் நிறம் மாறியதும் தூள் வகைகள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
 *தேவையான நீர் மற்றும் உப்பு சேர்த்து 4 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

 *கடைசியாக தேங்காய்ப்பால் மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.
பி.கு
*இந்த குழம்பிற்கு சின்ன வெங்காயம் சேர்த்து செய்யவும்.
01 09 10