Saturday 24 October 2015 | By: Menaga Sathia

காஜூ கத்லி(முந்திரி பர்பி) / KAJU KATLI(CASHEW BURFI) | DIWALI RECIPES



print this page PRINT IT
காஜு கத்லி முதல் முறையாக செய்யும் போது பாகுபதம் தவரி சொதப்பிவிட்டது,மேலும் முந்திரியை சரியாக பொடிக்காமல் செய்ததாலும் சரியாகவரவில்லை.

பின் இரண்டவது முறை செய்யும் போது முந்திரியை பொடித்து சலித்து,சரியான பாகு பதம் எடுத்து செய்ததில் சரியாக வந்தது.

தே.பொருட்கள்

முந்திரி -1/2 கப்
சர்க்கரை -1/2 கப்
நீர்- 1/4 கப்
நெய் -1/2 டீஸ்பூன்

செய்முறை

*முந்திரியை மிக்ஸியில் நிறுத்தி நிறுத்தி நைசாக பொடிக்கவும்.தொடர்ந்து  பொடித்தால் எண்ணெய் விடும்.

*பொடித்த முந்திரியை ரவை சலிக்கும் சல்லடையில் சலிக்கவும் அல்லது நைசாக பொடித்திருந்தால் சலிக்க தேவையில்லை.

*நான் ஸ்டிக் கடாயில் சர்க்கரை+நீர் சேர்த்து கரையும் வரை கலக்கவும்.

*1 கம்பி பதம் வந்ததும் பொடித்த முந்திரியை தூவி சிறுதீயில் கலக்கவும்.

*சிறிது நேரத்தில் அனைத்தும் சேர்ந்தார் போல் வரும் போது இறக்கவும் அல்லது சிறிது மாவினை எடுத்து உருட்டி பார்த்தால் உருட்டும் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.

*நெய் தடவிய தட்டு அல்லது பலகையில் கொட்டி,கை பொறுக்கும் சூட்டில் மாவினை பிசையவும்.

*குட்டியான பதத்தில் மிருதுவான‌  உருண்டையாக வரும்.

*இப்போழுது பட்டர் பேப்பர் வைத்து அதன் மீது உருண்டையை அதன் மீது இன்னொரு பட்டர் பேப்பர் வைத்து 1/4 அளவு தடிமனாக உருட்டவும்.

*மேலிருக்கும் பட்டர் பேப்பரை எடுத்துவிட்டு டைமண்ட் வடிவில் கட் செய்யவும்.

*சுவையான காஜூ கத்லி தயார்

பி.கு

*1 கம்பி பதம் என்பது சர்க்கரை பாகினை இரண்டு விரல்களுக்கு இடையை தொட்டு பார்த்தால் 1 இழை போல வரும்.

*முந்திரியை ப்ரிட்ஜில் வைத்திருந்தால் அறை வெப்பநிலையில் வந்த பிறகு பொடிக்கவும்,மேலும் மிக்ஸியின் ஜாரும் ஈரமில்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

*முந்திரியை பொடித்து சலித்துக் கொள்வது நல்லது.

*உருட்டும் போது சதுர வடிவில் உருட்டு துண்டுகள் போட்டால் அதிகம் வீணாகமல் இருக்கும்.

*இளஞ்சூடாக இருக்கும் போது உருட்டி துண்டுகள் போடவும்,ஆறினால் துண்டுகள் போட கஷ்டமாக இருக்கும்.

*பிசையும் போது  டிரையாக இருந்தால் சிறிது பால் தெளித்து மாவினை பிசையும்,அப்படி பிழையும் போது சீக்கிரமே பயன்படுத்திவிடவும்.

*பால் சேர்க்காமல் செய்தால் 1 வாரம்வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

*முந்திரியை பால் விட்டு அரைத்து செய்யும் போது பர்பிChewy ஆக‌ இருக்கும்.




3 பேர் ருசி பார்த்தவர்கள்:

”தளிர் சுரேஷ்” said...

என் பெண்ணுக்கு மிகவும் பிடித்த ஸ்விட்! பகிர்வுக்கு நன்றி!

great-secret-of-life said...

Looks yum! simple yet one of most famous sweet

'பரிவை' சே.குமார் said...

இதெல்லாம் பார்த்து நாவில் நீரோடு ரசிக்க மட்டுமே முடிகிறது...
செய்து சாப்பிடுவது என்பது ஊருக்குப் போனால்தான்....
அருமையாக இருக்கு....

01 09 10