Monday 3 November 2014 | By: Menaga Sathia

கடம்பூர் போளி / KADAMBUR POLI | PURAN POLI

கடம்பூர் போளி மிக பிரபலமானது.கடம்பூர்  கோவில்பட்டிக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில் அமைந்துள்ள சிறுகிராமம்.

இந்த போளியின் ஸ்பெஷல் மேல் மாவினை குறைந்தது 1 மணிநேரமாவது ஊறவைக்க வேண்டும்.மாவு எந்த அளவுக்கு ஊறுகிறதோ அந்த அளவு போளி மிகவும் மிருதுவாக இருக்கும்.

போளி எப்போழுதும் செய்த உடனே சாப்பிடுவதைவிட மறுநாள் சாப்பிட நன்றாக இருக்கும்.மேலும் சுவையான மிருதுவான போளி செய்ய இங்கே பார்த்து சிறு மாறுதலுடன் செய்தேன்.சுவையோ சுவை.

மிருதுவான போளி செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை கவனத்தில் கொண்டுசெய்தால் சுவையாக இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அளவில் 10 போளிகள் வரும்.

போளி செய்ய தே.பொருட்கள்

மேல் மாவுக்கு

மைதா - 1/2 கப்
மஞ்சள்தூள் - 3/4 டீஸ்பூன்
நீர் - 1/4 கப் + 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்

ஸ்டப்பிங் செய்ய

கடலைப்பருப்பு - 1/2 கப்
துருவிய வெல்லம் - 1/3 கப்
ஏலக்காய்த்தூள் -3/4 டீஸ்பூன்

போளி செய்ய
அரிசி மாவு -1/2 கப்
நெய் - சுடுவதற்கு

செய்முறை

*ஒரு பவுலில் தண்ணீர்+உப்பு+மஞ்சள்தூள் சேர்த்து கலக்கவும்.பின் அதில் மைதா சேர்த்து நன்கு அடித்து கலக்கவும்.

*மாவின் பதம் கண்டிப்பாக தளர்த்தியாக இருக்க வேண்டும்.பின் அதன் மேல் எண்ணெய் ஊற்றி அதிகப்பட்சம் 1 மணிநேரம் ஊறவைக்கவும்.

*ஸ்டப்பிங் செய்ய கடலைப்பருப்பினை நீர் ஊர்றி 3/4 பதம் வேகவைத்து நீரை நன்கு வடிக்கவும்.

*ஆறியதும் மிகஸியில் பவுடராக பொடிக்கவும்.

*வெல்லத்தில் சிறிதளவு நீர் ஊற்றி கொதிக்கவைத்து வடிகட்டவும். மீண்டும் அடுப்பில் வெல்ல நீரை வைத்து உருட்டும் பதத்தில் பாகு எடுக்கவும்.

*சிறிதளவு வெல்ல நீரை தண்ணீரில் ஊற்றினால் உருட்டம் பதத்தில் வந்தால் அதுவே சரியான பதம்.

*பாகு வந்ததும் ஏலக்காய்த்தூள் +பொடித்த கடலைப்பருப்பு சேர்த்து 2 நிமிடங்கள் கிளறி இறக்கி ஆறவைக்கவும்.

*மைதா மாவு ஊறியதும் எண்ணெயை தனியாக கிண்ணத்தில் வடிக்கவும்.அதில் நெல்லிக்காயளவு உருண்டை எடுக்கவும்.

*அதனை அரிசிமாவில் வைக்கவும்.அதன் மேல் ஸ்டப்பின் உருண்டையை வைக்கவும்.

*ஸ்டப்பிங் உருண்டை மேல் மாவினை விட 3 மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.அப்போழுது தான் போளி மிருதுவாக இருக்கும்.

*ஸ்டப்பிங் உருண்டையை பொறுமையாக மேல் மாவில் வைத்து எண்ணெய் தொட்டு உருட்டி மீண்டும் அரிசி மாவில் புரட்டவும்.

*இப்போழுது அதனை மிக மெலிதாக நிதனமாக உருட்டவும்.

*சூடான தவாவில் போடவும்.மேலே லேசாக உருண்டைகள் வரும் போது உடனே திருப்பி நெய் தடவவும்.

*பின் 2  நிமிடங்களில் மறுபுறம் திருப்பி நெய் தடவி எடுக்கவும்.

*சூடாக பரிமாறவும்.

கவனிக்க வேண்டியவை

1. மேல் மாவு தளர்த்தியாக இருக்க வேண்டும்,அப்போழுதுதான்  போளி மிக மிருதுவாக இருக்கும்.
2.அதனை கண்டிப்பாக அதிகப்பட்சம் 1 மணிநேரம் ஊறவைக்கவும்
3. கடலைப்பருப்பினை 1 மணிநேரம் ஊறவைத்து பின் பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் சரியாக இருக்கும் அல்லது 3/4 பதத்தில் வேகவைத்து எடுக்கவும்.
4.வேகவைத்த பருப்பினை நன்கு நைசாக பொடிக்கவும்.
5.எப்போழுதும் ஸ்டப்பிங் மேல் மாவினை விட முன்று மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.
6.அரிசி மாவில் அதிகமாக புரட்டி எடுத்து உருட்டினாலும் போளி ஹார்ட்டாக இருக்கும்.
7.போளி உருண்டை செய்யும் போது கின்ணத்தில் வைத்திருக்கும் எண்ணெயை தொட்டு உருண்டை செய்யவும்.
8.எப்போழுதும் போளி உருட்டும் போது அரிசிமாவில் புரட்டி உருட்டவும்.
9.போளி சுடும் போது நெய் தடவி சுடுவது சுவையாக இருக்கும்.
10. மேலும் போளி செய்து தவாவில் போட்டதும் மேலே சிறு உருண்டைகள் போல எழும்பி வரும் போது உடனே திருப்பி மறுபுறம் 2 நிமிடங்கள் மட்டும் வேகவைத்து எடுப்பது போளி மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.
11.அதிகநேரம் வேகவைத்து எடுத்தால் போளி கடினமாக இருக்கும்.

இந்த டிப்ஸ்களை பின்பற்றி போளி செய்தால் மிக மென்மையாகவும்,சுவையாகவும் இருக்கும்.

5 பேர் ருசி பார்த்தவர்கள்:

ராமலக்ஷ்மி said...

படங்களுடன் கவனத்துடன் தரப்பட்டப் படிப்படியான குறிப்புகள். நன்றி மேனகா.

sangeetha senthil said...

அருமையா செய்து இருக்கீங்க அக்கா.. குறிப்பா விளக்கங்கள் எல்லாம் மிக அருமை ...வாழ்த்துக்கள்

'பரிவை' சே.குமார் said...

படங்களுடன் போலி சூப்பருக்கா...
வாழ்த்துக்கள்.

Unknown said...

Wow my family's fav,looks lovely

great-secret-of-life said...

this is totally new to me.. looks great

01 09 10