Friday 16 August 2013 | By: Menaga Sathia

South Indian Mini Breakfast Thali

தென் இந்திய காலை சிற்றுண்டியில் இடம் பெறும் முக்கிய மெனு

இட்லி, வெண்பொங்கல் ,ரவா கேசரி,தேங்காய் சட்னி, சரவணபவன் ஹோட்டல் சாம்பார்  ,மெதுவடை, காபி...

இவையில்லாமல் பூரி,தோசை,மசால் தோசை, ஆப்பம், உப்புமா,கிச்சடி போன்ற இதர டிபன் ஐயிட்டங்களும் இடம் பெறும்.

ரவா கேசரி


தே.பொருட்கள்

ரவை - 1/2 கப்
சர்க்கரை - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
நீர் - 1 1/2 கப்
கேசரி கலர் - 1 சிட்டிகை
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரி-  10
திராட்சை -  8
நெய் - 1/4 கப்

செய்முறை

* கடாயில் சிறிது நெய் விட்டு வையை 2 நிமிடங்கள் நிறம் மாறாமல் வறுக்கவும்.


*வேறொரு பாத்திரத்தில் நீர்+உப்பு+கேசரி கலர் சேர்த்து கொதிக்கவிடவும்.


*ரவை வறுபட்டதும் முந்திரி திராட்சை சேர்த்து கிளறி  கொதிநீரை ஊற்றி கிளறவும்.ரவை வெந்ததும் சர்க்கரை சேர்த்து கிளறவும்.


*நன்கு சுருண்டு வரும் போது ஏலக்காய்த்தூள் மற்றும் மீதமுள்ள நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.

பி.கு

*ரவையில் கொதிக்கும் நீர் ஊற்றி கிளறுவதால் கட்டிவிழாமல் இருக்கும்,கிளறுவதற்க்கும் ஈசியா இருக்கும்.

*கொடுத்துள்ள அளவுபடி நெய் சேர்த்தால் நன்றாக இருக்கும்.





16 பேர் ருசி பார்த்தவர்கள்:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஹைய்யோ ஹைய்யோ !

உங்களின் ரவா கேசரியைப் பார்த்ததும் எனக்கு நாக்கில் நீர் ஊறுதே !

எனக்கு உடனே வேண்டுமே, நான் என் செய்வேன்?

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் said...

ரவா கேசரியுடன், இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார், நுறை பொங்கும் ஸ்ட்ராங் காஃபி அடடா ...

அசத்திட்டீங்க மேனகா.

உங்க அட்ரஸ் மட்டும் தெரிந்திருந்தால் இந்நேரம் ப்ளெனைப்பிடித்து அவ்விடம் வந்து ஆஜராகியிருப்பேன். ;)))))

ருசியான பகிர்வுக்கு நன்றிகள், மேனகா.

உங்க வீட்டில் உள்ளவங்க மிகவும் கொடுத்து வெச்சவங்க.

வாய்க்கு ருசியா இதெல்லாம் தினமும் செய்து கொடுக்க ஒரு மேனகா இருக்கும்போது அவர்களுக்கு என்ன கவலை? ;)))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

என் இன்றைய சிறப்புப்பதிவுக்கு உடனே வாங்கோ மேனகா.

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

அன்புடன்
கோபு

Unknown said...

awesome plate full with yummy food....

New Post at Anu's - Mini Dark Chocolate Cups with Dry Fruits and Nuts
South Indian Cooking
Anu's Healthy Kitchen - "HOW TO's ? of Kitchen" EVENT and SHARE PAGE and a RECIPE (Paneer Celery Burji)

இப்னு அப்துல் ரஜாக் said...

wow masha allah,very nice sister

சாரதா சமையல் said...

ரவை கேசரியோடு இட்லி ,பொங்கல் ,வடை ,காபி வைத்து அசத்திட்டீங்க !

meena said...

wonderful platter.rava kesari superb aa iruku.

great-secret-of-life said...

super thali coming to ur home

Unknown said...

drool worthy spread :) love this yummy platter :)

Priya Anandakumar said...

Wow Menaga such a lovely super mini breakfst, paarthaley pasikudhu. Rave kesari looks mouth watering, yummy Menaga...

இராஜராஜேஸ்வரி said...

சுவையான தென்னிந்திய சமையல் அசத்தல்..பாராட்டுக்கள்.!

Mahi said...

Perfect breakfast Menaga!

'பரிவை' சே.குமார் said...

ரவா கேசரியை பார்க்கும் போது நாக்கில் எச்சில் ஊறுது...

Unknown said...

Thank you for giving the simple recipe for Kesari. (In the title it has been mentioned as South Indian Mini Break fast Thali. I was wondering how you will give the recipe for all the items)

Priya Suresh said...

Antha plate yennaku venum..Super breakfast thali Menaga.

Unknown said...

yummy platter..it makes me hungry..

01 09 10