Thursday 23 February 2012 | By: Menaga Sathia

ப்லாக்ஸ் ஸீட்(ஆளி விதை) இட்லி பொடி/Flax Seeds(Linseed) Idli Podi

Flax Seeds/ Linseed/Alsi Seeds தமிழில் இதனை ஆளி விதை என்று சொல்வார்கள்.இதில் அதிகளவு Omega -3 Fatty Acids, Vitamin B, Magnesium, and Manganese இருக்கு.2 வகைகள் இருக்கு ஒன்று ப்ரவுன் கலரிலும்,மற்றொன்று மஞ்சள் கலரிலும் இருக்கும்.

இதில் அதிகளவு நார்சத்தும் இருக்கு.இதனை அப்படியே விதையாக சாப்பிடாமல் பவுடராக அரைத்து  சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.

கொழுப்பு சத்தினை குறைக்க மிகவும் உதவுகின்றது.கெட்ட கொழுப்பினை குறைத்து,நல்ல கொழுப்பினை அதிகரிக்க உதவுகிறது.சர்க்கரை நோய் உள்ளவர்களும்,கர்ப்பிணிகளும் சாப்பிடுவது நல்லது.

இதில் இட்லி பொடி செய்தேன்,மிகவும் நன்றாக இருந்தது.

தே.பொருட்கள்
ஆளி விதை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -2
பெருங்காயம் - சிறு கட்டி
உளுத்தம்பருப்பு,கடலைப்பருப்பு,தனியா - தலா 1 டேபிள்ஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் -1/4 டீஸ்பூன்

செய்முறை
*பெருங்காயம்+கா.மிளகாய் தவிர அனைத்தையும் வெரும் கடாயில் வறுக்கவும்.

*சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து ,பின் கா.மிளகாயை வறுக்கவும்.

*அனைத்தையும் ஆறியதும் ஒன்றாக உப்பு சேர்த்து அரைக்கவும்.

பி.கு

இந்த பொடியை உருளை,வாழைக்காய் வறுக்கும் போது இந்த பொடியை தூவி வறுக்கலாம்.

19 பேர் ருசி பார்த்தவர்கள்:

ஸாதிகா said...

சத்துமிகு இட்லி பொடி.அவசியம் செய்து பார்த்துவிடவேண்டும்

மனோ சாமிநாதன் said...

மிக நல்ல குறிப்பு. சத்தானதும்கூட!!

Aruna Manikandan said...

healthy delicious powder menaga :)
nice informative post.

Raks said...

Loved the idea, great for health too!

சாருஸ்ரீராஜ் said...

நல்லா இருக்கு மேனகா

Jaleela Kamal said...

ஆழி விதை இல்லை மேனகா,
ஆளி விதை
ரொம்ப நல்லது உடம்புக்கு, நானும் இட்லி பொடி, சட்னி, ரொட்டி எல்லாம் செய்து இருக்கேன்

Sumi said...

romba nalla iruku..I was also planning to post a podi very similar to this :)

Hema said...

Just now got a bag of flax seeds, nice way to use it, thanks Menaga for sharing this..

Vimitha Durai said...

Healthy podi.. Thanks for sharing dear

ராஜி said...

ஆழி விதையா புதுசா இருக்கே.

Anzz said...

Looks lovely and sounds very healthy. Would love to try this one.. Thanx for sharing..!

Sangeetha M said...

very healthy n tasty podi...thanks for sharing...will try this soon!!
Spicy Treats
OnGoing Event:Show Me Your HITS~Healthy Delights

Unknown said...

My kids love idli podi..aim gonna try this nutritious version

hotpotcooking said...

Healthy podi. Happy to follow you

சி.பி.செந்தில்குமார் said...

ஹலோ டம் டம் மேடம், மீ எ டவுட். பிலாக் சாப்பிட்டா பிளாக்ல போஸ்ட் போட ஈசியா இருக்குமா? ஹி ஹி

Sriya said...

first time here ... glad to follow you very yummy podi visit my blog
www.sriyafood.blogspot.com

Jayanthy Kumaran said...

very new & interesting..
thanks for sharing menaga..;)

Tasty Appetite

MyKitchen Flavors-BonAppetit!. said...

very new to me.Innovative and healthy Idli Chilli powder Dear. yummy try indeed.

தெய்வசுகந்தி said...

Good one!!

01 09 10