Tuesday 29 December 2009 | By: Menaga Sathia

கொள்ளு - ஒட்ஸ் கொழுக்கட்டை

தே.பொருட்கள்:

கொள்ளு - 1 கப்
ஒட்ஸ் - 1 + 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 3
உப்பு +எண்ணெய்= தேவைக்கு

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - சிறிது
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

*கொள்ளை 4 மணிநேரம் ஊறவைத்து காய்ந்த மிளகாய்+உப்பு சேர்த்து கொரகொரப்பாக நீர் சேர்க்காமல் அரைக்கவும்.

*1 கப் ஒட்ஸை வெறும் கடாயில் வாசனை வரும் வரை வறுத்துப் பொடிக்கவும்.

*தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து ஒட்ஸில் சேர்க்கவும்.அதனுடன் அரைத்த கொள்ளு சேர்த்து கெட்டியாக பிசையவும்.

*அதனை சிறு உருண்டைகளாக பிடித்து மீதமிருக்கும் 1/2 கப் ஒட்ஸில் பிரட்டி எடுத்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*சுவையான கொழுக்கட்டை ரெடி.இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட நன்றாகயிருக்கும்.

பி.கு:

விருப்பப்பட்டால் ஒழுக்கட்டையில் தேங்காய்ப்பல் சேர்க்கலாம்.

9 பேர் ருசி பார்த்தவர்கள்:

அண்ணாமலையான் said...

உடம்புக்கு சத்தானது...

Shama Nagarajan said...

yummy different recipe..looks perfect..healthy

நட்புடன் ஜமால் said...

கடைசியா ஒரு மேட்டர் சொன்னீங்க பாருங்க (தே.சட்னி) ஆஹா ஆஹா

Jaleela Kamal said...

கொள்ளு கொழுக்கட்டை டயட்டுக்கு ஏற்ற உணவு.

பித்தனின் வாக்கு said...

அருமையான கொளுக்கட்டை. நல்லா இருக்கு. பார்சல் பிளிஸ். நன்றி.

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம்ம். ரொம்ப சத்தான கொழுக்கட்டைதான்

சுவையோ சுவை said...

மிக்க நன்றி சித்திசா. நீங்கள் எங்கள் தளத்திற்க்கு வருகை தந்தமைக்கு. மிக்க மகிழ்ச்சி.

Priya Suresh said...

Healthy kozhukattais, pakkave supera irruku..

ஸாதிகா said...

கொள்ளுவில் கொழுக்கட்டை..வித்தியாசமாக யோசிக்கறீங்க மேனகா.

01 09 10