Sunday 11 October 2009 | By: Menaga Sathia

கோதுமை மாவு சுண்டல் /Wheat Flour Sundal

தே.பொருட்கள்:

கோதுமை மாவு - 1 கப்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய் - 1டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
கேரட் + மாங்காய்த் துறுவல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:

கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1டீஸ்பூன்


செய்முறை :

*கோதுமை மாவில் உப்பு+நெய்+கரம் மசாலா+மிளகாய்த்துள் சேர்த்து ஒன்றாக கலந்து நீர் விட்டு சப்பாத்தி மாவு போல் கெட்டியாக பிசையவும்.

* அதை சிறு உருண்டைகளாக உருட்டி பட்டன்போல் லேசாக தட்டிக் கொள்ளவும்.
*ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்கவிட்டு அதில் பட்டன் உருண்டைகளைப் போட்டு,வெந்து லேசாக எழும்பி வரும்போது எடுத்து வடியவிடவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து கேரட்+மாங்காய்த் துறுவல் சேர்த்து உருண்டையில் கொட்டவும்.

*ஈசி சுண்டல் ரெடி.

கவனிக்க:

*உருண்டையாக உருட்டி போட்டால் வேக லேட்டாகும்.அதனால் பட்டன்போல் தட்டிப் போட்டால் 5 நிமிடத்தில் அனைத்தும் உருண்டைகளும் மேலே எழும்பி வரும்.

*விருப்பப்பட்டால் தேங்காய்த்துறுவலும் சேர்க்கலாம்.

22 பேர் ருசி பார்த்தவர்கள்:

Anonymous said...

வாவ்..நான் என் தோழி வீட்டில் இதே போல் சாப்பிட்டிருக்கேன் மேனகா..ஹெல்த்தி ஒன்...

இதே போல் ஒட்சில் செய்வேன்..ரொம்ப நல்லா இருக்கும் ..ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்கபா ..(கீதா அக்கா கிட்டேந்து பாத்து செஞ்சதுதான்)


அன்புடன்,

அம்மு.

பித்தனின் வாக்கு said...

இம் நல்லா இருக்குங்க. வித்தியாசமா இருக்கு. ஒரு ஞாயிற்றுக்கிழமை முயற்ச்சிக்காலாம் என உள்ளேன். சக்கரை நேய் உள்ளவர்களுக்கு இது டயட் உணவாக அமையும்.

மாதேவி said...

சத்துச் செறிவான கோதுமை மாவு சுண்டல் நன்றாய் உள்ளது.

S.A. நவாஸுதீன் said...

கடலை இல்லாமலே வித்தியாசமா ஒரு சுண்டல். தூள்

Priya Suresh said...

Wow, Menaga wat a delicious and healthy sundal...Naan appadiye saapiduvene, kalakuringa pa...

R.Gopi said...

கோதுமை மாவு சுண்டல்...

இப்போதான் இந்த பெயரை கேள்விபடுகிறேன் மேனகா...

பரவாயில்லை... புதுசா இருக்கு... ட்ரை பண்ணி பார்ப்போம்...

இப்போதைக்கு எனக்கு ஒரு பார்சல் கிடைக்குமா??

Priya Suresh said...

Menaga, oatflour naane veetula prepare panninen, just grind the quick cooking oats as fine powder and sieve it, ur oat flours is ready..Ivalo than..

அன்புடன் மலிக்கா said...

மேனகா சூப்பர் டிஸ், நானும் செய்துபார்த்து சொல்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

புதுமை ...

suvaiyaana suvai said...

nalla irukku

SUFFIX said...

பார்ப்பதற்க்கு கார்ன் ப்ளேக்ஸ் மாதிரி இருக்கு, புதுசு புதுசா எங்களுக்கு செஞ்சு காண்பிக்கிறீங்க, ரொம்ப நன்றி!!

Menaga Sathia said...

ஒட்ஸில் முயற்சிக்கிறேன் அம்மு.தங்கள் கருத்துக்கு நன்றி!!

நிச்சயம் முயற்ச்சித்து சொல்லுங்க.சக்கரை நோய் உள்ளவர்களுக்கு ஏற்றதுதான்.நன்றி பித்தன்!!

Menaga Sathia said...

நன்றி மாதேவி!!தங்கள் வருகைக்கும் நன்றி..


நன்றி நவாஸ்!!

Menaga Sathia said...

நன்றி ப்ரியா!!சாப்பிடுங்கப்பா உங்களுக்கு இல்லாததா...


பார்சல் அனுப்பினேன் வந்ததா? செய்து பாருங்கள் ரொம்ப ஈஸிதான்.நன்றி கோபி!!

Menaga Sathia said...

நன்றி மலிக்கா!!செய்து பார்த்து சொல்லுங்கள்.

நன்றி ஜமால்!!

Menaga Sathia said...

நன்றி சுஸ்ரீ!!


நன்றி ஷஃபிக்ஸ்!!

Priya dharshini said...

SIDE EFFECT ELLATHA SUNDAL..NALA IDEA

GEETHA ACHAL said...

நல்லா இருக்கு....

Menaga Sathia said...

நன்றி ப்ரியா,கீதா!!

Jaleela Kamal said...

மேனகா ரொம்ப அருமை கோதுமை சுண்டல்.புதுமையும் கூட‌

VaniVenu said...

idu daan mudhal murai...inda recipe godumai maavi sundal try panna porein. kandippaga nalla varumnu daan thonradu...wish me luck. and, nandri inda healthy recipe post seidadarkku.

VaniVenu

Menaga Sathia said...

நிச்சயம் நன்றாக வரும்.செய்து பார்த்து சொல்லுங்கள்.வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி வாணிஸ்ரீ!!

01 09 10